மிதுனம்: கவலைகள் மறையும் (2.12.2012 முதல் 21.6.2014 வரை )
கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச்
செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள
உயர்வோடு மேல் அதிகாரிகளின் அனுசரணையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு
நல்ல நிலைமை வந்து சேரும். வேலை இல்லாமல் காத்திருந்தவர்களுக்கு சரியான
வேலை அமையும்.
புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவற்றை மிகு ந்த பாதுகாப்புடன்
வைத்திருங்கள். பழைய வீடு, வாகனம் என சொத்துகள் வாங்குவீர்கள். அரசியலில் உள்ளவர்களும்
பொதுவாழ்க்கையில் உள்ளவர் களும் மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பர். அரசாங்க
சலுகைகள் கிடைக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். அதே வேளையில் அதிகமாக
உழைக்க வேண்டியதிருக்கும். நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பும்
அரவணைப்பும் உங்களின் பொது வாழ்க்கைக்கு உறுதுணையாகவே இருக் கும். உங்களுக்கு
நற்பெயர் கிடைக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம். தந்தையாரின் உடல்நலனில் கவனம்
செலுத்தவும். தலைவலி, வயிறு மற் றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் வந்து செல்லும். தாயின்
உடல்நலம் மேம்படும். சந்தோஷம் பெருகும்.